Wednesday, 18 December 2024

nA ERu pAmaNaththa 093 - 109

 

093 - 109 நா ஏறு பாமணத்த - சுவாமிமலை

 

சிறந்த அன்பர்களுடைய நாவில் ஊறிய

பாடல்களின் மணம் வீசும் 

உன் பாதத்தை நினைத்து,

சிவாகமங்களில் சொன்ன 

முத்தி நெறியை அனுஷ்டித்து,

உன்னுடன் நான் ஐக்கியம் ஆவதற்கு 

அருள்புரிவாயே.

சிவனார் உன் வலம் வந்து நிற்க,

அவருக்கு உபதேசத்தை சொன்ன குருநாதனே,

அசுரர்களை வென்றவனே, 

குகனே, குறத்தி மணாளனே,

காவேரியின் வடகரையில் உள்ள

சுவாமிமலையில் எழுந்தருளியவனே,

காளி, சத்தி, அழகி, 

பார்வதி பெற்ற பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...