081 - 096 எந்தத் திகையினும் - சுவாமிமலை
எந்தத் திசையிலும் மலையிலும்,
வேறு எந்தக் கரையிலும் வசிக்கும்
பலவகையானப் பிறவிகளால் உழலாமல்
நான் இந்தப் பிறப்பிலேயே
உயர்நிலை பெறுவதற்கு,
உன் திருவடிகளில் மலர் கொண்டு
வேதமுறைகள்படி கும்பிட்டு வணங்கி,
திருநடனம் இடும் உன் திருவடிகளில்
எனது உள்ளம் உருகுமாறு அருள்வாயே.
தேவர்கள் மலர் சொரிய, பிரமன் வேதம் ஓத,
அசுரர்கள் இறக்கச் செய்த வேலாயுதனே,
என் தந்தை சிவபிரானுக்கு உயிர்போன்ற
பச்சை வடிவழகியான உமாதேவியின் இளையவனே,
லக்ஷ்மியின் கணவரான திருமாலின் மருகனே,
குருமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment