Wednesday, 18 December 2024

OruruvAkiya - thiru ezhu kUtrirukkai 096 - 113

 

096 - 113 ஓருருவாகிய - திரு ஏழு கூற்றிருக்கை

 

சக்தி சிவம் என்னும் இரண்டின் லக்ஷணங்களும் அமைந்து,

ஓர் உருவாகச் சேர்ந்து என்றும் இளமையோடு விளங்குகிறாய்.

அந்தணர் குலத்தில், திருஞானசம்பந்தராய் அவதரித்தாய்.

பிரணவத்தின் பொருள் தெரியாத 

பிரமனை குட்டி சிறையில் அடைத்தாய்.

அரி, அரன், இந்திரன் ஆகியவர் வேண்ட, 

பிரமனை சிறையினின்றும் விடுவித்தாய்.

மயிலில் ஏறி, இவ்வுலகமே அஞ்ச 

ஒரு நொடிப்பொழுதில், வலம் வந்தாய்.

இந்திரனின் மகள் தேவயானையை 

மணம் செய்து கொண்டாய்.

தினைப்புனத்தில் வந்த கிழ யானைக்கு 

மூத்த சகோதரனாக விளங்கினாய்.

ஐங்கரங்களை உடைய கணபதிக்கு 

இளைய சகோதரனாக விளங்குகிறாய்.

நான்கு வேதங்களாலும் 

இவரே இறைவன் என்று உணர்த்தப் பெறுபவரும்,

சூரிய, சந்திர, அக்கினி என்னும் 

முச்சுடரை தம் கண்களாக உடையவரும்,

நல்வினை, தீவினை இரண்டிற்கும் 

மருந்தாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானுக்கு

ஒப்பற்ற குருநாதனாக அமைந்தாய்.

உமாதேவியின் மார்பில் சுரந்த 

ஞானப்பாலைப் பருகி,

இயல், இசை, நாடகம் என்ற 

மூன்று தமிழிலும் வல்லவனாகி,

நால்வகைக் கவியிலும் அரசனாகி,

ஆறு முகங்களை உடைய ஷண்முக மூர்த்தியே

இவன்தான் என யாவரும் கூற

சீகாழிப்பதியில் திருஞானசம்பந்தனாகத் தோன்றினாய்.

கார்த்திகைப் பெண்களின் புதல்வனானாய்.

தேவலோகத்துக்குச் சக்ரவர்த்தியாக விளங்கினாய்.

கிரெளஞ்சமலையை பிளக்க 

ஒப்பற்ற வேலினைச் செலுத்தினாய்.

காவிரியின் வட பாகத்தில் 

சுவாமிமலையில், திருவேரகத்தின் இறைவன்

என்ற திருப்பெயருடன் எழுந்தருளி இருக்கின்றாய்.

 

 



No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...