109 - 130 கொந்துவார் குரவடியினும் - திருத்தணிகை
அடியார்கள் மனத்திலும்,
வேதத்திலும், பழநியிலும்,
திருச்செந்தூரிலும், திருத்தணியிலும் விளங்குபவனே,
சமயவாதிகளால் பெறுவதற்கு அரிதானதும்,
மற்றவர்களால் சந்திக்க முடியாததும்
ஆன உன் திருவடி தந்த கிருபையைக்
கனவிலும் நனவிலும் மறவேன்.
கங்கை, பிறை சந்திரன், பாம்பு இவைகளைத்
தரித்துள்ள சிவபிரான் மகனே,
மரகத பச்சை வடிவி, வள்ளியின் அழகை
மடல் ஏட்டில் எழுதி வருணித்த பெருமாளே.
No comments:
Post a Comment