117 - 140 பொற்பதத்தினைத் துதித்து - திருத்தணிகை
உன் அழகிய பாதங்களை துதித்த
பத்தர்களுடைய சிறப்பினை எடுத்துரைத்து
உள்ளம் உருகத் தெரியாமலும்,
ஞானத்தால் உன்னை நினையாமலும்,
இருக்கும் என்னை
இந்த இழிவான பிறப்பில் இருந்து நீக்கி,
மோக்ஷ இன்பத்தை அளித்தருளும்
பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ.
இமவான் வளர்த்த பார்வதியை
தன இடபாகத்தில் வைத்த
சிவபிரான் பெற்ற மயில் வீரனே,
முத்தமிழின் சொல்லும்,
பொருள் ஓசையும் உள்ள
திருத்தணியில் வாழ்பவனே,
வள்ளியை அணைந்தவனே,
அசுரர்கள் கூட்டத்தை அழித்து
வஜ்ராயுதனாம் இந்திரனுக்கு
சூரன் இட்ட கைவிலங்கை முறித்த பெருமாளே.
No comments:
Post a Comment