037 - 045 மனத்தின் பங்கென - திருச்செந்தூர்
ஐம்புலன்களின் தொடர்புகொண்டு,
என் உடல் அழியும் முன்பு,
என் துன்பத்தைத் தொலைத்து
இன்பத்தைத் தந்தருள்வாய்.
பாஞ்சஜன்யம் எனும் சங்கை ஏந்தி,
பாற்கடலில் துயில்கின்ற திருமாலும்,
அவன் உந்திக் கமலத்திலிருந்து
தோன்றிய பிரமனும்,
அவர்களுடைய பெருமை யாவும்
குறைவுபடுமாறு
சந்தப்பாடல்களைக் கேட்டு மகிழும்
சிவபிரானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தவனே,
வள்ளிமலையில் வாழும்
வள்ளியை அணைந்தவனே,
செழிப்புள்ள திருச்செந்தூரில்
வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment