082 - 097 ஒருவரையும் ஒருவர் - சுவாமிமலை
இருவினைகளால் மனம் வேதனைப்பட்டு,
பல ஆட்டங்கள் ஆடிய என்னை,
உன் அடியருள் ஒருவனாக எண்ணி
ஒப்பற்றப் பரம்பொருள் இது என எனக்கு உபதேசித்து,
என் பிறப்பு வினைகளும் மும்மலங்களும் நீக்க,
என்னை, மயில் மீது வந்து ஆண்டருள்வாய்.
திரிபுரத்தையும், மன்மதனையும் எரித்து
ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜனும்,
அருணகிரியில் எழுந்தருளிய
சிவபெருமானது இடது பாகத்தில் இருக்கும்
உமாதேவி அருளிய மகனே.
எல்லா வேதங்களும் குமரகுரு என ஒலிக்க
மயில் மீது வருபவனே,
குறமகள் வள்ளி, இந்திராணிமகள் தேவயானை,
இருவருடன் சுவாமிமலையில்
வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே.
No comments:
Post a Comment