071 - 083 பாரியான கொடை - பழநி
நீ பாரியைப் போன்ற கொடைவள்ளல்,
நாயகன், அழகன், அரசன்,
என்றெல்லாம் நரஸ்துதி செய்து
இரக்கம் இல்லாதவர்கள் அருகே நிற்கலாமோ.
முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரனை,
அன்று ஆதிமூலமே என்றழைக்க,
காப்பாற்றிய ஆதிநாராயணன்,
பாஞ்சஜன்யம் எனும் சங்கை ஏந்தியவன்,
மாதவன், பிரமனின் தந்தை,
லக்ஷ்மியை மார்பில் தரித்தவன்,
ஆகிய திருமாலின் மருமகனே,
வீரம், பராக்கிரமம், உக்கிரம், உள்ளவனே,
பன்னிருகையுடைய நாயகனே, மயில் வாகனனே,
கலிசை ஊர் தலைவன் மனதில்
வீற்றிருக்கும் பெருமாளே,
வீரை எனும் தலத்தில்
வீற்றிருக்கும் பழநி பெருமாளே.
No comments:
Post a Comment