Friday, 13 December 2024

sivanAr manam kuLira 060 - 071

 

060 – 071 சிவனார் மனம் குளிர - பழநி

 

சிவபிரான் மகிழ, அவர் இரு செவிகளிலும்

பிரணவத்தின் பொருளைச் சொன்ன குருநாதனே,

சிவகாமசுந்தரியான பார்வதியின் மைந்தனே,

உனக்கு தொண்டு செய்ய நினையாமல்,

உலகில் வீணாகத் திரியும் என்னை

அஞ்சாதே எனக்கூறி அருளவேண்டும்.

மனதில் அறிவு பெருக,

துன்பங்கள் தொலைய,

ஞான இன்பத்தைத் தருவாயே.

வெண்ணையைத் திருடின அரி, 

ரகுராமன் ஆன திருமால் மகிழும் மருகனே,

யாவரும் கைதொழும் உண்மைத் தைவமே,

தேவயானைக்கும் வள்ளிக்கும் மணாளனே,

வீரனே, வேலாயுதனே,

திரு ஆவினன்குடியில் எழுந்தருளிய அழகனே,

உலகில் உண்மைப் பொருளை 

தெரிவித்த பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...