107 - 126 கலை மடவார்தம் - திருத்தணிகை
மன்மதன் விட்ட பாணங்களால்
கவலைப்பட்டு நான் அழிவுறாமல்,
குளிர்ந்த மாலையை நீ தந்தருள்வாய்.
பார்வதி நாயகன் சிவனும்,
கலைமகள் நாயகன் பிரமாவும்,
திருமகள் நாயகன் திருமாலும்
வணங்கி வழிபடுகின்ற வேலாயுதனே,
வள்ளியையும் தேவயானையையும் அணைந்தவனே,
புலவர்கள் உலாவும்
திருத்தணிகையில் வாழும் வேலனே,
உலகபாசத்தை நீக்கிய
உன் அடியார்களுடைய
தனிமையை நீக்கி அருள
மயில் மீது வருவாய்.
No comments:
Post a Comment