139 - 166 தொல்லைமுதல் தானொன்று - கொல்லிமலை
பழமையும் முதலானதுமான ஓன்று,
சத்தி சிவன் ஆன இரண்டு,
மூன்று குணங்கள், நான்கு வேதங்கள்,
ஐந்து புலன்கள், ஆறு வேதாங்கங்கள்,
பல நாதங்களில் தங்குவதாய்
தமிழ் இன்னிசையின் வடிவாகி
முடிவிலா ஆனந்தத்தில் மூழ்க நீ அருள்வாய்.
கண்ணன் முன்பு
ரிஷப வாகனமாகியபோது
அதன்மீது வந்த எங்கள் தந்தை சிவபிரானுக்கு
உண்மை ஞானத்தை
உபதேசித்த வேலாயுதனே,
வள்ளியை தினைப்புனத்தில்
சென்று அணைத்த அழகனே,
கொல்லிமலையில் நின்று
அருளும் பெருமாளே.
No comments:
Post a Comment