058 - 069 குரம்பை மலசலம் - பழநி
சிறுகுடிலாகிய இந்த வீட்டில்
ஐம்பொறிகளின் சேட்டையினால்
நரகம் போகவேண்டிய எனக்கு,
அழகனே, சரவணனே,
நீ மயில்மீதுவந்து தந்த உபதேசத்தையும்
உன் திருவடிகளையும் நான் மறவேன்.
இணையில்லாத சிதம்பரம்
எனும் நாட்டிற்கு உரியவனே,
கிரௌஞ்சமலையை பொடியாக்கி
அசுரர்களையும் அவர் படைகளையும்
யமலோகத்துக்கு அனுப்பினவனே,
பிரமன், முனிவர்கள் தேவர்கள் புகழ
நடனம் செயும் சிவபிரானுக்குக் குருநாதனே,
குறப்பெண் வள்ளியை அணைந்தவனே,
பழநிவாழ் பெருமாளே.
No comments:
Post a Comment