075 - 088 மூலமந்திரம் ஓதலிங்கிலை - பழநி
மூலமந்திரம் ஓதுவது, ஈவது,
அன்பு, மௌனநிலை, ஞானம்
இவை ஒன்றும் இல்லை,
என்னிடம் மோகம், தாகம், ஆசை, அபராதம்,
இவைகள் எல்லாம் உண்டு,
இப்படியுள்ள உடலைச் சுமந்து நிற்கும் என்னை
ஞான உள்ளம் படைத்த அடியார்களுடன்
சேரும் புத்தியை தந்தருள்வாய்.
சமணர்களோடு வாதுசெய்து வென்று,
பாண்டிய மன்னனின் நோய் தீர,
திருஞான சம்பந்தராய் அவதரித்த முருகனே,
நஞ்சை உண்டவரும், முக்கண்ணருமான
சிவபிரானுடைய இடபாகத்தில் அமர்ந்திருக்கும்
உமாதேவிக்குப் பிறந்த குமரனே,
வேதங்கள் போற்றுகின்ற குருவே,
திரு ஆவினன்குடியில் வாழும்
சேவல் கொடியுடையோனே,
No comments:
Post a Comment