055 - 065 கதியை விலக்கு மாதர்கள் - பழநி
நற்கதியை அடைய முடியாதவனாக,
நான் கவலையுடன் இருந்த போதிலும்
உன் திருமேனியையும் ஆறு முகங்களையும்
வலிமையான தோள்களையும்
வெற்றி வேலையும் கலாப மயிலையும்
கோழிக் கொடியையும்
அடியார்கள் போற்றி வணங்கும்
உன் திருவடிகளையும்
ஒருபோதும் மறக்கமாட்டேன்.
சூரிய அம்சமான சுக்ரீவனுக்கு
அரசாட்சி கிடைக்க அருளிய
ராகவன் மருகனே,
பதினோரு ருத்திரர்கள் விளங்கும் கோவிலில்
அன்போடு வீற்றிருப்பவனே,
கற்பக மலர்கள் உதிர்கின்ற
பழநியில் வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment