084 - 099 கடிமாமலர்க்குள் - சுவாமிமலை
கடப்ப மாலை அணிந்தவனே,
வேலாயுதனே, பன்னிரண்டு புயன்களை உடையவனே,
வள்ளிமணாளனே,
நக்கீரருக்கு இலக்கண நயங்களை
எடுத்துரைத்து, 'உலகம் உவப்ப'
என அடி எடுத்துக் கொடுத்தவனே,
அடியேன் சொல்லுகின்ற என் சொற்கள் மீதும்
உன் திருவருளை பாலிக்கவேண்டும்.
பாபச் செயல்களால் வந்த துன்பங்களை
நான் அனுபவித்தல் ஆமோ,
திறம் வாய்ந்த தவசிகள்
உன் பாதங்களால் ஈடேறப் பெற்ற
சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment