106 - 125 எது புத்தி ஐயா - திருத்தணிகை
எனக்கு புத்தி எது,
நான் யரைச்சென்று நாடுவேன்,
வீணாக இறப்பதுதான் என் விதியோ,
எனக்கு நீயே தாயும் தந்தையாக இருந்தும்,
நான் இவ்வாறு தவிக்கலாமோ.
மற்றவரின் இகழ்ச்சிக்கு நான் ஆளாகலாமோ.
என்னை இகழ்ந்து சிரிப்பவர்கள் முன்னில்
உன் திருவடிகளோடுச் சேர்த்துக்கொள் ஐயனே.
அது செய்யாவிடில், உலகோர் நகைப்பார் ஐயனே.
அசுரர்களை வென்ற வேலாயுதனே,
மானும் மழுவும் ஏந்திய நடராசன் தந்த செல்வமே,
வள்ளியைத் தழுவிய மயில் வாகனனே,
மெய்த்தவசிகள் வாழும்
திருத்தணிகைப் பெருமாளே.
No comments:
Post a Comment