Sunday, 15 December 2024

thakara naRumalar pothuLiya 064 - 076

 

064 - 076 தகர நறுமலர் பொதுளிய - பழநி

 

ஆசைக் கடலில் மூழ்கி, 

அதனால் உண்டான துயர் தீர,

அகர எழுத்தை முதலாவதாகக் கொண்ட

பிரணவப் பொருளை நீ உபதேசிக்க, 

என் அஞ்ஞானம் அகல, 

பச்சை மயில் மீது நீ வரவேணும்.

கோவர்த்தனகிரியின் கீழ் 

குழலிசை வாசித்ததவன்,

விதுரனுடன் விருந்துக்கு வந்தவன்,

மது எனும் அசுரனைக் கொன்றவன்,

பஞ்ச ஆயுதங்களை உடையவன்,

காளிங்க நிருத்தம் செய்தவன்,

இப்படியான திருமாலின் மருகனே,

கணபதி யானை உருவில் வந்ததைக் கண்டு

வள்ளியை அஞ்சவைத்த குகனே,

உமாதேவியின் மகனே,

பழநியில் வீற்றிருப்பவனே,

தேவர்கள் பெருமாளே.

 

 


No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...