057 - 068 கருவினுருவாகி வந்து - பழநி
கருவில் உருவாகிப் பிறந்து,
பல கலைகள் கற்று,
உலகமாயையில் சுழன்று வாட்டம் அடைந்து,
நாள்தோறும் உன்னை நினையாது நின்று,
ஆறு சமயங்களின் உண்மையை
ஒன்றுகூட அறியாதவனாக அழிந்து போவேனோ.
ஆதிசேஷன் மீது துயிலும் பெருமாள்,
ஸ்ரீரங்கத்தில் உள்ளவர்,
உலகை அளந்த பெருமாள்
மகிழ்ச்சி கொள்ளும் முருகனே,
வெற்றிக் கவிராஜசிங்கமாக,
சம்பந்த மூர்த்தியாக
சீகாழியில் தோன்றியவனே,
பரவை நாச்சியார் வீட்டுக்கு
சுந்தரருக்காக தூது சென்றவனுடைய
அருளால் வளர்ந்த குமரா,
பகைத்து வந்த அசுரர்களை அழித்து
தேவர்களை சிறையினின்று மீட்டிய
பழநிமலைப் பெருமாளே.
No comments:
Post a Comment