147 - 175 புவனத்தொரு - திருசிராப்பள்ளி
இந்த பூமியில் பிறந்து
விதிப்படி கஷ்டங்கள் அனுபவித்து,
உயிர் போனபின்னும்,
நான் படவேண்டிய யமதண்டனை
எனும் துயரத்தை நீக்கி அருள்வாய்.
உலகப் பற்றை ஒழித்த தவசீலர்களின்
கருத்தில் போற்றப்படும்
வயலூரில் வாழும் குருநாதனே,
உத்தமன், ருத்திரன், முக்கண்ணன், திகம்பரன்,
மழு ஏந்தியவன், திரிபுரத்தை எரித்தவன், ஆதிமூர்த்தி,
மூலப் பொருளும் உண்மைப் பொருளும் ஆனவன்,
அறிவுக்கு எட்டாதவன்,
அற்புதன், உவமை இல்லாதவன்,
ஆகிய சிவபிரானிடத்துத் தோன்றியவனே,
திருசிராப்பள்ளியில் அமர்ந்தவனே.
No comments:
Post a Comment