050 - 060 ஆறுமுகம் ஆறுமுகம் - பழநி
ஆறுமுகம் என ஆறுமுறை சொல்லி,
குகனே, சரவணனே, என் ஈசனே
என்று கூறியும், நீ கேளாதிருந்தால்
உன்னை யார்தான் புகழ்வார்,
வேதம் உன்னை என்னதான் சொல்லாதோ.
வேலனே, அழகிய மயில் வாகனனே,
உமையாள் பெற்றவனே,
கஜமுகாசுரன் உயிரை உண்ட
ஆனைமுகத்
தேவரின் தம்பியே,
பழநியில் வாழ்பவனே,
அசுரர்களும் என் வினைகளும் அழிய
வேலை செலுத்தினவனே,
தேவர்களுக்கு வரம் தந்த தம்பிரானே.
No comments:
Post a Comment