Monday, 16 December 2024

manakkavalai Ethum intri 073 - 086

 

073 - 086 மனக்கவலை ஏதும் இன்றி - பழநி

 

மனதில் சஞ்சலம் இல்லாமல்

உனக்கு தொண்டு செய்ய,

வேதத்தின் பொருளை உணர்ந்து

ஆனந்தத்துடன் ஆகம முறைப்படி

உன்னை வணங்க அருளைத் தரவேணும்.

உன்னை வணங்கும் முனிவர்களும் 

தேவர்களும் வேண்ட சூரனை வென்ற வேலனே,

தினைப்புனத்தில் சென்று 

வள்ளியை மணம் புரிந்து, 

மலர்ச்சோலைகள் நிறைந்த 

திருப்பழநியில் வீற்றிருப்பவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...