068 - 080 திமிர உததி அனைய - பழநி
இருண்ட கடல் போன்ற பிறப்பு,
நான் மறுபடியும் எடுக்கவேண்டி வந்தால்,
செவிடு, அங்ககீனம், வறுமை
இவை ஏதும் இல்லாது,
நல்ல லக்ஷ்ணமும் உயர்ந்த பிறப்பும்,
அறிவும் ஒழுக்கமும் தந்து
என்னை ஆட்கொள்ளவேண்டும்
மலை பொடியாக, கடல் அலற,
அசுரர்களை வென்ற வேலாயுதா,
பாம்புப் படுக்கையில்
இனிமையுடன் துயிலும் திருமாலின் மருகனே,
நீலகண்டனின் குமரா,
பழநியில் வந்து தொழும் தேவர்கள் பெருமாளே.
No comments:
Post a Comment