Sunday, 15 December 2024

gnAnankoL poRikaL kUdi 063 - 075

 

063 - 075 ஞானங்கொள் பொறிகள் கூடி - பழநி

 

ஐம்புலன்களும் ஞானநிலை கூடப்பெற்று,

நமசிவாய எனும் பேரின்ப அருவி பாய,

நான் என்பது அற்று, 

உன்னுடன் ஒன்றாய்ச் சேர அருள்வாய்.

கொன்றைமாலை, அத்திமாலை, பிறைச் சந்திரன்,

இவைகளைச் சூடிய என் தந்தையும்,

பஞ்ச சத்திகளின் கலவையான

உமாதேவியை இடது பாகத்தில் 

சேர்ந்து இருப்பவருமான

சிவபெருமான் தந்த குமாரனே,

அழகிய மயில்மீது வருபவனே,

வள்ளியுடன் இணைந்து

பழநிமலையில் எழுந்தருளிய பெருமாளே.

 

 


No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...