132 - 159 தேனுந்து முக்கனிகள் - கயிலைமலை
தேன் முக்கனிகள் இவைகளுக்கு
மேம்பட்டதாக இருக்கும்
சிவனின் திருவருள் பெருகவும்,
இருவினைகளும் அகங்காரமும் அழியவும்,
உயிர்பற்று உடற்பற்று
இரண்டையும் அகற்றியும்,
சிவஞானம் பெருக,
மோக்ஷத்தில் இருக்குமாறு அருள்வாய்.
பாற்கடலில் தோன்றின விஷத்தைக் குடிக்க
கரத்தை எடுத்தவரான சிவனார்
பெற்றரருளிய குமரா,
என்னை காப்பதற்காக
திருக்கயிலாயமலையில் எழுந்தருளிய
வள்ளி மகிழ்கின்ற பெருமாளே.
No comments:
Post a Comment