066 - 078 தலைவலி மருத்தீடு - பழநி
பலவகையான நோய்கள் வந்து,
அதனால் வந்த மனவேதனைகள்
எனும் விதியை இந்நிலையில் எழுதாதபடி,
உன்னை வணங்கும்
தவசிரேஷ்டர்கள்போல் வேண்டிக்கொண்டு,
ஆய்ந்த அறிவுடன் பாடி,
உன்னை வழிபடுவதற்கு,
ஆடும் மயில் மீது நீ வந்தருள வேண்டும்.
கடலை ஆணையிட்டு அடைத்து,
ராவணனுடைய முடிகளை அறுத்து
சீதாதேவியை அழைத்துக்கொண்ட
ராமனை மாமன் என அழைக்க வந்தவனே,
உயிர்களுக்கு ஆதாரமானவனும்
காளி
வெட்கும்படி சபையில் ஆடினவனுமான
சிவனை தந்தை என அழைக்க வந்தவனே,
வித்தகனே, வேலாயுதனே,
வள்ளியை அணைந்தவனே,
காவேரி சூழ பழநியில் வந்தமர்ந்த
தேவர்கள் பெருமாளே.
No comments:
Post a Comment