074 - 087 மூலங்கிளர் ஓருருவாய் – பழநி
பரம் பொருளின் திருவடிகளைப் பெறுதற்கு,
ஞானமயமான சதாசிவ நிலையை அடைந்து,
அவ்விடத்தில் கேட்கப்படும்
பாடலிலும் நாதத்திலும்
சிலம்புகளின் ஒலியிலும்
அன்பு பொருந்தும்படியாக
அடியேனுக்கு அருள் புரிவாயாக.
திரி சூலம், கலைமான், மழு, உடுக்கை,
பிரமனின் கபாலம் இவைகளுடன் பாம்பு,
இவை சேர்ந்துள்ள சிவபெருமான் பெற்ற முருகனே,
சூரனின் தலை தூள்படும்படியாக
வேலைச் செலுத்திய தலைவனே, மயில் வீரனே,
காலில் அணிந்துள்ள கழலின் சிலம்பொலியும்,
யுகமுடிவைக் காட்டும்
ஓசைகளாகத் திகழும்படி நடனம் புரிபவனே,
வள்ளிமலைக் காட்டில் வந்த
கலை மானின் மகளாகிய வள்ளியை
கூச்சம் ஏதுமின்றி அணைக்கின்ற தலைவனே,
ஒளி வீசும் பழநியில் வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment