Sunday, 15 December 2024

panjapAthakan pAvimuzhu 070 - 082

 

070 - 082 பஞ்சபாதகன் பாவிமுழு - பழநி

 

பஞ்சபாதகங்கள் செய்தவன், 

ஈதர்குணம் இல்லாதவன்,

பண்பு இல்லாதவன், ஆயினும்

தேவர்களும் திருமாலும் பிரமனும்

தேடியும் காண ஓணாத சிவபிரானும்,

பார்வதியும் கூடிவிளையாடுகின்ற

சிவலோகத்தில் உள்ளவர்களோடு 

நான் விளையாட அருள்வாய்.

சூரனும், அவன் சேனையும், கடலும்

க்ரௌஞ்சமலையும் ஒடுங்க 

வேலாயுதத்தை செலுத்தினவனே,

ரகுராமருடைய தங்கை, அழகிய காளி, சிவகாமி, 

வேண்டியவர்க்கு வேண்டியதைத் தரும் 

உமாதேவி அருளிய பாலனே,

குறப்பெண் வள்ளியை அணைந்தவனே,

சோலைகளும் மரங்களும் சூழ்ந்த

பழநி மலையில் வாழும் குமரா.

 


 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...