069 - 081 பகர்தற்கரிதான செந்தமிழ் - பழநி
அரியதான தமிழ் பாடல்களைக் கற்றுக்கொள்ளாமல்
நான் இந்த பூமியில் திரிந்தலைந்து
அழிவதற்குமுன், மயில் மீது வந்து அருள்புரிவாய்.
ஞானப்பாலை அருந்திய திருஞான சம்பந்தனே,
கஜேந்திரனைக் காக்க,
ஒருநொடிப் பொழுதில் வந்த
திருமாலின் மருகனே,
எல்லா மந்திரங்களுக்கும் முதலான,
ஓம் எனும் பிரணவ மந்திரத்தை
சிவனுக்கு உபதேசித்த குருநாதனே,
தேவர்கள் தலைவன் இந்திரன் வழிபட்ட
திரு-ஆவினன்குடியில் வாசம் செயும் பெருமாளே.
No comments:
Post a Comment