072 - 085 போதகந்தரு கோவே - பழநி
ஞான உபதேசம் தருபவன்,
நீதிக்கு இருப்பிடமானவன்,
பூமியை ஆள்பவன்,
வள்ளியை மணந்தவன்,
பிரமன் புகழ்கின்ற சுவாமி,
வேதமந்திர வடிவினன், அழகன்,
ஞானபண்டித நாதன்,
தேவயானையின் கணவன்,
வெற்றி நிறைந்த விசாகாமூர்த்தி,
உன் திருவருளைத் தருவாயாக.
சூராதி அசுரர்களை அழித்தவன், வேலாயுதன்,
பாதிநிலவை அணிந்தவர், கயிலாயநாதர்,
ஆதிசங்கரனார் எனும் சிவனும்
உலகமாதாவும் அன்புடன் சீராட்ட,
திரு ஆவினன்குடியில்
வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே.
No comments:
Post a Comment