112 - 133 தாக்கமருக்கொரு சாரையை - திருத்தணிகை
கோழை, சுயநலவாதி, நாத்திகன்,
துரோகி, அஞ்ஞானி, வீணன்,
ஆயினும் மோக்ஷ உலகில்
உன் அடியார்களோடு சேரும் பாக்கியம்
எனக்குக் கிடைக்காதோ.
மூக்கு அறுக்கப்பட்டவள், அறிவில்லாதவள்,
ராவண வதத்திற்குக் காரணமானவன்,
விபீஷணனுக்கு சகோதரியான சூர்ப்பணகை,
ராவணனிடம் சீதையைக் குறித்துக் கூற,
ராவணன் அவளை மாயமாக
அசோகவனத்தில் கொண்டுபோய் வைக்க,
அந்த ராவணனோட வம்சம்
அழிந்துபோகக் காரணமான ராமனின் மருகனே,
வேதகோஷங்கள் முழங்கும்
திருத்தணிகையில் வாழ்பவனே.
No comments:
Post a Comment