095 - 111 பாதிமதி நதி போதும் - சுவாமிமலை
பிறை சந்திரனையும், கங்கையையும்,
மலர்களையும் அணிந்த
சிவபிரான் அருளிய குமரேசனே,
இனிய மொழியுடைய வள்ளியின் மணாளனே,
ஸ்ரீ ராமருக்கும் லட்சுமிக்கும் மருமகனே,
யமன் என்னை அணுகாதவகைக்கு
உன் திருவடியை வழிபடும்
புத்தியை அருள்வாய்.
தேவர்களை சிறையிலிருந்து மீட்டினவனே,
நடனம் ஆடும் மயில் மீது வருபவனே,
சோலைகள் நிறைந்த
சுவாமிமலையில் வீற்றிருப்பவனே,
சூரன் உடல் விழ, கடல் வற்ற
வேலை விடுத்தவனே.
No comments:
Post a Comment