114 - 136 நிலையாத சமுத்திரமான - திருத்தணிகை
சம்சாரக் கடலிலே மூழ்கி,
பெரியோர்கள் கூட்டத்தில்
சேராமலிருந்த நான்,
தடுமாறி தவிக்காமல்,
உன் புகழை ஓதி,
இவ்வுலகில் உய்யுமாறு அருள்புரிவாய்.
வள்ளிமணாளா, உன்னை உற்ற துணையாக
தேடுகின்ற என்னை காப்பது உன் கடமை.
உன் புகழ் பாடுபவர்களை அருள்பவனே,
இந்த உலகத்தில் சிவலோகம் எனும்
அன்பை உண்டாக்கத்தக்க,
பிறவிப் பிணி தீர்க்கவல்ல,
திருத்தணி வாழ் வைத்தியநாதப் பெருமாளே.
No comments:
Post a Comment