040 - 049 மூளும் வினைசேர - திருச்செந்தூர்
முன்வினைகளின் பயனாலும்,
ஐம்பொறிகளின் மாயங்களினாலும்,
உலக வாழ்க்கையிலே சுழலும் எனக்கு,
அத்துவைத முத்தியை உணர்ந்து
சுகவாழ்வில் இருக்கும் ஒருநாள் உண்டாகுமோ.
பாற்கடலில் தோன்றிய
ஆலகால விஷத்தை அருந்தியவள்,
மாதங்க முனிவரின் மகள்,
வேதங்களால் புகழப்பட்டுபவள், துர்கை,
மார்க்கண்டேயன் உயிரை காப்பாற்ற
யமனை காலால் உதைத்தவள்,
ஆனந்தநடனம் ஆடும் சிவபிரானின்
இடப்பக்கம் அமர்பவள்,
சிவனுடன் எதிர் தாண்டவம் ஆடியவள்,
இந்த உலகத்தை ஆள்கின்ற
திருமாலின் தங்கை,
ஆகிய பார்வதியின் மைந்தன்,
எமது பிதாவாகிய சிவபிரானின்
இளைய புதல்வன்,
குற்றமற்ற அடியார்கள் வாழ்கின்ற
ஊர் தேடிச் சென்று
அங்கேயே தங்கும் மயில்வீரனே,
திருச்செந்தூர் பெருமாளே.
No comments:
Post a Comment