103 - 122 எலுப்பு நாடிகள் - திருத்தணிகை
இந்த உலகத்தில் பிறந்து,
மோகவலையில் வீழ்ந்து,
தவநிலையைக் குறித்து சிறிதேனும்
சிந்தியாதவர்களோடு அலைந்து திரிவேனோ.
போரில் அசுரர்களைக் கொன்ற வேலனே,
ராவணவதம் செய்தவனும்,
மகாபலியைப் பாதாளத்தில் தள்ளினவனும்,
இரும்பு உலக்கையை பொடியாக்கி,
நடுக்கடலில் கரைத்தவனுமான
திருமாலின் மருகனே,
பிரமனை தலையில் குட்டினவனே,
நடனம் செய்த பார்வதியை மணந்த
சிவபிரானுக்கு உபதேசித்தவனே,
வள்ளியை மணந்து
மகிழ்ச்சியுடன் திருத்தணியில் இருப்பவனே.
No comments:
Post a Comment