125 - 150 உடுக்கத் துகில் வேணும் - கதிர்காமம்
இந்த உலகில் எதெது வேண்டும்
என நினைத்து,
என் வாழ்வு வீணாகக் கழியாமல்,
கருணை உள்ளத்தையும்
சிவஞான போதத்தையும்
நீ அழைத்துத் தரவேண்டும்.
மேற்கும், வடக்கும், கிழக்கும்
சில தூதர்கள் தேட,
குறிப்பினால் குறிப்பை உணரும் அனுமனை
தெற்கு திசையில்
சீதையைத் தேட அனுப்ப,
அவன் கடலைத் தாண்டி
இலங்கைக்குச் சென்று,
ராமனின் மோதிரத்தை அவளுக்கு
அளித்த அனுமனை
அனுக்கிரகித்து கதிர்காமத்தில்
வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment