127 - 152 கடகட கருவிகள் - கதிர்காமம்
கதிர்காமக் கடவுளே,
கடலை அலைவுறச் செய்தவனே,
யானை வளர்த்த
தேவயானையை மணந்தவனே,
திருமால் பயப்பட, பிரமா ஓடிட,
மேருமலை நடுங்க
நடனம் செய்த மயில் மீது வருபவனே,
எனது மூவாசைகளும் அழிந்து ஒழிந்திடுமோ.
காட்டுக்குச் சென்று
வள்ளிக்கு அடிமையாகி
அவளை அடைந்தவனே,
காட்டில் திரிந்துகொண்டிருந்த
பொய்யாமொழிப் புலவரை ஆண்டருள
வேலை தோளில் ஏந்திச்
சென்று அருளியவனே,
பார்வதிக்குத் தனது இடபாகம் தந்த
சிவபிரானின் குழந்தையே,
இனியமொழி பேசினாலும்
ஆணவப் பேச்சுகளைப் பேசினாலும்
அடியேனிடம் கருணை காட்டும் பெருமாளே.
No comments:
Post a Comment