042 - 051 வஞ்சத்துடனோரு நெஞ்சிற் - திருச்செந்தூர்
உயிரை கொண்டு செல்வதற்கு
யமன் வரும் அந்த நாளில்
உனது திருவடிகளைத் தந்தருளவேண்டும்.
தாமரை மலரில் அமரும்
பிரமனைச் சிறையிலிட்ட வேலாயுதனே,
இனிய மொழி பேசும்
தேவயானையை விரும்பும் அழகனே,
புலவர்கள் புகழ்கின்ற
தமிழை சூடிக்கொண்டு
திருச்செந்தூரில் வீற்றிருப்பவனே,
க்ரௌஞ்சமலையை சிதறப்
போர் செய்தவனே.
No comments:
Post a Comment