092 - 108 நாசர்தம் கடையதனில் - சுவாமிமலை
தவறான மக்களோடு சேர்ந்து
அந்தவழியில் நான் போகாமல்,
எல்லோரும் தொழும் உன் புகழின்
ஓர் சொல்லாவது சொல்லி
நறுமணம் வீசும் உன் பாதங்களை
நின்று வணங்க மாட்டேனோ.
உபதேசமொழியை நீ பேச,
சிவபிரான் மெச்சிப் புகழ்ந்த குருநாதனே,
இந்திரன் போற்றி வளர்த்த
தேவயானையை மனம் புரிந்தவனே,
நிறைய மரங்கள் சூழ்ந்ததும்,
திருமால் போற்றுகின்றதுமான
சுவாமிமலையில் யோகநிலையில்
அமர்ந்த பெருமாளே.
No comments:
Post a Comment