141 - 168 எழுகுநிறை நாபி - திருக்கழுக்குன்றம்
ஏழு உலகங்களையும்
தன வயற்றில் அடக்கிய திருமால்,
பிரமன், ருத்திரன், மற்ற தேவர்களுக்கும்
தலைவியான ஆதி பராசத்தியின்
ஞானப்பாலை அருந்தியவனே,
சீகாழியில் கவுணர் குலத்தில் அவதரித்து,
தமிழ் பாசுரப் பாடல்களை,
ஆற்றின் நீரில் எதிர் ஏற்றத்தில் செலுத்தி,
சமணர்களைக் கழுவில் ஏற்றியவனும்,
ஆன ஞான சம்பந்தனே,
சிவபிரானின் குமாரனே,
பிரமாவைச் சிறையில் அடைத்து
படைப்புத் தொழிலைச் செய்தவனே,
கழுகுகள் தொழுகின்ற,
தேவர்கள் வேத மந்திரங்களையும்
தமிழ் மறைகளையும் ஓதுகின்ற
கதலிவனம் எனும்
திருக்கழுக்குன்றத்தில் வாழும் பெருமாளே.
No comments:
Post a Comment