Sunday, 15 December 2024

suruthimudi mOnanchol 062 - 074

 
062 - 074 சுருதிமுடி மோனஞ்சொல் - பழநி

 

வேதங்களின் முடிவில் விளங்கும் மௌனநிலையை 

உபதேசித்து அருளும் பெரும்பொருளே,

ஒளியாய் நிற்கின்ற உருவம் இல்லாதவனே,

ஜீவன் முத்திக்கு ஞானத்தை அருளும்

உன்னை நான் ஆட்கொள்ள அருள்புரிவாய்.

ஆறு சமயங்களுக்கும், வேதங்களுக்கும்

முதலும் முடிவும் நடுவும் ஆக நிற்பவனே,

இன்பவடிவு உடையவனே,

சத்திவேலை ஏந்தியவனே,

பிரணவ மந்திரத்தின் தலைமையாக 

எழுந்தருளிய குருநாதனே,

பெருமை தங்கிய திருவடிகளை உடையவனே,

மயில் வாகனனே,

உன்னை வணங்கும் அடியார்கள் உள்ளத்தில்

சரவணபவா எனும் ஆறெழுதில்

அஞ்ஞான இருளை நீக்கும்

பழநிமலையில் வீற்றிருப்பவனே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...