038 - 046 முந்து தமிழ் மாலை - திருச்செந்தூர்
தமிழில் கோடிக்கணக்காக
சந்தப்படி பாடிப்பாடி,
என்னுடைய முன்வினை தீர,
என்னை ஆண்டருள
தீரம்கொண்ட மயில்மீது
எப்போது வருவாய்.
செந்தமிழ் பாடல்களை
மாலையாக அணிபவனே,
தேவர்களுக்கு உபகாரியே,
சேவல் கொடியுடையோனே,
அடியார்கள் மேல் அன்பு பூண்டவனே,
க்ரௌஞ்சமலை பொடிபட வேலை ஏவினவனே,
பகைவரை மாய்க்கும் மாயக்காரனே,
அழகனே, திருச்செந்தூரில் வாழ்பவனே.
No comments:
Post a Comment