Sunday, 15 December 2024

sIRal asadan vinaikAran 061 - 073

 

061 - 073 சீறல் அசடன் வினைகாரன் - பழநி

 

நான் கோபமுடையவன், அசடன்,

நல்ல குணம் இல்லாதவன், 

இப்படி இருந்தபோதிலும்,

முருகா, நீ என்னை 

உன் அடியார்களுடைய கூட்டத்தில்

கூட்டிவைக்கும் வழியை தந்தருள்வாயாக.

நீதி நெறி இல்லாத அசுரர்கள் மாள 

போர்செய்து வெற்றி மகுடத்தைத் தரித்தவனே,

மயிலை வாகனமாக உடையவனே,

புகழ் பெற்ற கலிசை எனும் ஊரில் வாழ்ந்த

மன்னனின் மனதில் வீற்றிருப்பவனே,

வீரை எனும் தலத்தில் வாழும் குமாரசுவாமியே.

பழநியில் எழுந்தருளிய 

தேவர்கள் வணங்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...