Monday, 23 December 2024

vanjaka lObha mUTar 137 - 164

 

137 - 164 வஞ்சக லோப மூடர் - குன்றுதோறாடல்

 

வஞ்சகர்களையும், 

ஈயாத தன்மையுடைய மனிதர்களையும்

பாரியே காரியே எனப் புகழ்ந்து 

வீணாக அழியாமல்

உனைப் பாடி வாழ்வுற,

ஞானம் சுரக்கும் உன் வாயால் 

திருமொழியை அருள்வாய்.

பாண்டியனின் கூனையும்,

காய்ச்சலையும் நீங்கச்செய்து

சமணர்களை கழுவில் ஏற்றியவனும்,

திருநீற்றைத் தந்தவனும், 

ஆன திரு ஞான சம்பந்தனே,

வேடர்கள் உன்னை வணங்க

பலமலைகளில் அமர்ந்து

திருவிளையாடல்கள் புரியும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...