115 - 137 நினைத்ததெத் தனையிற் - திருத்தணிகை
நினைத்தது கைகூடவும்,
நிலையான ஞானத்தைவிட்டு
நான் பிரியாமல் இருக்கவும்,
தத்துவங்களைக் கடந்த நிலையை
நான் அடையவும்,
நிரந்தரமான சித்த நிலையை
எனக்கு அருள்வாயே.
அன்பர்களுக்கு எளியவனே,
முத்தமிழில் சிறந்தவனே,
சிவனுக்கு தோன்றியவர்களில் இளையவனே,
திருத்தணிப் பெருமாளே.
No comments:
Post a Comment