054 - 064 கடலை பொரி அவரை - பழநி
கடலை பொரி பழங்கள் கரும்பு
இவைகளை புசிக்கின்ற
யானைமுகனுக்கு இளையவனே,
கயிலாயமலை அதிரும்படி
ஒருநொடியில் உலகத்தை
மரகத பச்சை மயிலில் சுற்றியவனே,
தேவேந்திரன் மகள் தேவயானை, குறமகள் வள்ளி,
இருவருக்கும் கணவனே,
அசுரர்கள் மடிய, தேவர்கள் சிறை நீங்க,
வேலை செலுத்தின சரவணபவனே,
சந்திரனை தரித்த சிவபிரானும்,
கங்கா நதியும் உமாதேவியும்
பெற்றருளிய குழந்தையே,
பழநிமலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment