033 - 040 படர்புவியின்மீது மீறி - திருச்செந்தூர்
வஞ்சனையுடைய லோபியரிடம்,
நான்தான் மதுர கவிராசன், ஆசுகவி,
என தம்மைத்தாமே புகழ்ந்து,
மயக்க அறிவோடு இருக்கும்
புலவர்களின் அகங்காரம்
அவர்களைவிட்டு நீங்காதோ.
சலந்தராசுரனுடன் போர்
செய்ய முடியாமல்
சிவனை தியானித்து அந்த அசுரனின்
உடலைப்பிளக்க சக்ரத்தைத் தருமாறு
திருமால் பூசைசெய,
ஒருநாள் ஒரு பூ குறைய,
தன்கண்ணை எடுத்து அர்ச்சிக்க,
திருமாலுக்கு சக்ராயுதத்தை அருளிய
மகாதேவர் மகனே,
இந்திரனின் மகளாம் தேவயானையை மணந்தவனே,
பெருமை நிறைந்த திருச்செந்தூரில்
அடியேனை ஆட்கொள்ள வந்தருளிய தலைவனே,
No comments:
Post a Comment