039 - 048 மூப்புற்றுச் செவி கேட்பற்று – திருச்செந்தூர்
கிழப்பருவத்தை அடைந்து செவிடாகி,
தடுமாற்றம் வந்து,
யமன் என் உயிரை எடுப்பதைத் தவிர்த்து,
உன் திருவடியில் சேர அருள்புரிவாய்.
திரிபுரத்தை அழித்த சிவபிரானின் குருநாதனே,
வனத்தில் வளர்ந்த வள்ளியை நேசித்தவனே,
சொல்லுக்கும் சித்தத்துக்கும் அப்பாற்பட்டவனே,
புண்ணிய தீர்த்தங்கள் சுற்றியுள்ள
திருச்செந்தூரில் வீற்றிருப்பவனே.
No comments:
Post a Comment