Monday, 16 December 2024

iruvinai punainthu gnAna 080 - 095

 

080 - 095 இருவினை புனைந்து ஞான - சுவாமிமலை

 

அடியேன் சிவயோகத்தை மேற்கொண்டு,

முன் வினைகள் தீர, என் ஆணவம் ஒழிய,

நீயும் நானும் ஒன்றாக வேண்டி,

தேவர்களும் முனிவர்களும் புகழ்ந்து பாட,

மயில் வாகனத்தில் நீ வரவேண்டும்.

நாராயணனும் பிரமனும் காண முடியாத 

பாதம் பொருந்திய, தாண்டவ நடனம் செய்த நடராஜனும்,

பச்சைநிறப் பெண் பார்வதியை 

இடப்பக்கத்தில் வைய்த்த சிவனின் புதல்வா,

பகைவர்களாம் அசுரர்களை வென்ற வேலாயுதா,

காவிரியின் வடகரையில் உள்ள 

திரு-ஏரகத்து அமர்ந்த பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...