043 - 052 வந்து வந்து முன் - திருச்செந்தூர்
நான் இறக்கும் தருணத்தில்,
உன் தண்டைகள் அணிந்த
பாதங்களை தந்தருள்வாய்.
சந்தனம், மந்தாரம், கரும்பு, வாழை முதலிய
மரங்கள் சூழ்ந்துள்ள
திருச்செந்தூரில் வாழ்பவனே,
தினைப்புனத்தில் சென்று
வள்ளியை வணங்கினவனே,
தேவயானையை அணைக்கும் மார்பனே,
தினைப்புனத்துக்கு உன் பொருட்டுச்
சென்ற நாரதர், இந்திரன்,
அகத்தியர், சிவபிரான்,
மற்று தேவர்கள் தொழும் தம்பிரானே.
No comments:
Post a Comment