Sunday, 22 December 2024

chutrakapadOdu pala 122 - 147

 

122 - 147 சுற்றகபடோடு பலசூது வினையான - இரத்னகிரி

 

வஞ்சனை சூழ்ந்த வீணான 

வாழ்க்கையில் மூழ்கி,

யமன் நெருங்கும் வேளையில் கூட, 

ஐந்து இந்திரியங்கள் ஓடியாட, 

நான் இறந்துபோவேனோ. 

அதற்குள் உன் அழிவில்லாத 

திருவடியை தந்தருளுக.

திருமால், சிவன், மற்ற தேவர்களும் 

முனிவர்களும் ஆட,

பல திக்குகளிலும் இருந்து வந்த 

அசுரர்கள் மாள,

கூர்மையான வேலை செலுத்தினவனே,

பல வேடங்கள் போட்டு ஏமாற்றி

வள்ளியின் உள்ளத்தை காதலித்தவனே,

சிவபெருமானோடு இரத்னகிரியில் 

வாழும் முருகனே,

என்றும் இளையவனே, 

தேவர்கள் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...